search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழுவதும் இந்தியாவில் கட்டப்பட்ட கல்வாரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் மோடி
    X

    முழுவதும் இந்தியாவில் கட்டப்பட்ட கல்வாரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்பணித்தார் மோடி

    பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்துடன் முழுவதும் இந்தியாவில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ் கல்வாரி நீர்மூழ்கி கப்பலை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்து வைத்தார்.
    மும்பை:

    பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்பத்துடன் 6 ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகள் இந்தியாவின் மும்பை நகரில் கட்டப்பட்டு வருகின்றன. இரண்டு நீர்மூழ்கிகள் முழுவதுமாக கட்டமைக்கப்பட்டு தீவிர பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மேற்கண்ட ரக நீர்மூழ்கிகளில் ஒன்றான ஐ.என்.எஸ் கல்வாரியை பிரதமர் மோடி நாட்டுக்காக இன்று அர்பணித்து வைத்தார்.

    மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் பட்நாவிஸ் மற்றும் கடற்படை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.



    இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே உள்ள உறவின் அடையாளமாக இந்த நீர்மூழ்கி திகழ்வதாக பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசினார்.

    மின்சாரம் மற்றும் டீசலால் இயங்கும் ஸ்கார்பியன் வகை நீர் மூழ்கியானது நவீன ரக ஆயுதங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். துல்லியமாக இலக்கை தாக்கும் வகையிலான ஏவுகணைகளை ஏவும் திறன் பெற்ற இவ்வகை நீர்மூழ்கிகள் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் விதமாக உள்ளது.
    Next Story
    ×