search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமர் பால விவகாரத்தில் காங்கிரசுக்கு பா.ஜனதா கண்டனம்
    X

    ராமர் பால விவகாரத்தில் காங்கிரசுக்கு பா.ஜனதா கண்டனம்

    ராமர் பால விவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், ரெயில்வே மந்திரியுமான பியூஷ் கோயல் கண்டனம் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ராமேசுவரம் அருகே பாம்பனில் இருந்து இலங்கை தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. இது இந்து மதத்தினரின் நம்பிக்கையாகவும் உள்ளது.

    இதை உறுதி செய்வது போல, அமெரிக்க டெலிவிஷனில் அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில், ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமெரிக்க விஞ்ஞானிகள், ராமர் பாலம் மனிதர்களால் (வானர சேனைகளால்) உருவாக்கப்பட்டதுதான் என கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

    ஆனால் மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, ராமர் பாலம், கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகள் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

    இது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், ரெயில்வே மந்திரியுமான பியூஷ் கோயல் நிருபர்களிடம் பேசுகையில்,



    காங்கிரசின் நிலைப்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தார். அத்துடன், “ராமரை கடவுள் என பாரதீய ஜனதா நம்புகிறது. ராமர் பாலம் மதிக்கப்பட வேண்டும். அதில் பல கோடி மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அதை சேதப்படுத்தி விடக்கூடாது” என்று கூறினார்.

    இதேபோன்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத்தும், “ராமர் பாலம், இந்த நாட்டின் பாரம்பரிய சின்னம். அதை சேதப்படுத்தக்கூடாது” என்று குறிப்பிட்டார். 
    Next Story
    ×