search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் விதியை மீறி டி.வி. சேனல்களுக்கு பேட்டி: ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
    X

    தேர்தல் விதியை மீறி டி.வி. சேனல்களுக்கு பேட்டி: ராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

    தேர்தல் விதியை மீறி டி.வி. சேனல்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
    புதுடெல்லி:

    குஜராத் சட்டசபைக்கு இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, குஜராத் தேர்தல் பற்றி அளித்த பேட்டிகள், சில டெலிவிஷன் சேனல்களில் ஒளிபரப்பானது. ஓட்டுப்பதிவு முடிவதற்கு முந்தைய 48 மணி நேரத்துக்குள், தேர்தல் தொடர்பான பேட்டியை ஒளிபரப்புவது, மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிய செயல் ஆகும். இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அந்த பேட்டிகளை ஒளிபரப்புவதை உடனே நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.

    மேலும், இந்த விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு குஜராத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.

    அத்துடன், பேட்டி அளித்த ராகுல் காந்தியிடம் விளக்கம் கேட்டு, அவருக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 18-ந் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது. 
    Next Story
    ×