search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை: சுங்கசாவடி ஊழியர்களுக்கு உத்தரவு
    X

    ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை: சுங்கசாவடி ஊழியர்களுக்கு உத்தரவு

    ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    சமீப காலமாக சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் வரும்போது, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

    இதையடுத்து, மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் வரும்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



    நாட்டை பாதுகாக்கும் இணையற்ற சேவையை செய்யும் ராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் தேவை.
    எனவே சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் பணி நிமித்தமாக கடந்து செல்லும்போது அடையாள அட்டையை சரிபார்க்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அனுமதி இல்லை.

    சுங்கச்சாவடிகளில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமே ராணுவ வீரர்களின் அடையாள அட்டையை சோதனை செய்ய வேண்டும்.

    ராணுவ வீரர்கள் பணியில் உள்ள போது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படுவது இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களை எவ்விதத்திலும் தரக்குறைவாக நடத்துதல் கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×