search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமர்நாத் கோவிலுக்குள் மணி அடிக்க, மந்திரங்கள் கூற தடை - தேசிய பசுமை தீர்ப்பாயம்
    X

    அமர்நாத் கோவிலுக்குள் மணி அடிக்க, மந்திரங்கள் கூற தடை - தேசிய பசுமை தீர்ப்பாயம்

    அமர்நாத் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல, மணி அடிக்க மற்றும் சத்தமாக மந்திரங்கள் கூற தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

    இந்நிலையில், ஒலி மாசு காரணமாக கோவிலுக்குள் மணி அடிக்க மற்றும் பக்தர்கள் சத்தமாக மந்திரங்கள் கூற தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம், அமர்நாத் குகைக்கோவில் நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளது.


    மேலும், ‘செல்போன் எடுத்துச் செல்ல கூடாது. கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கடைசி சோதனைச் சாவடியிலிருந்து பக்தர்கள் ஒரு வரிசையில் நின்று செல்ல வேண்டும்.

    பக்தர்கள் தங்கள் செல்போன் மற்றும் உடமைகளை கடைசி சோதனைச் சாவடிக்கு பிறகு கொண்டு செல்லக்கூடாது. உடமைகளை வைப்பதற்காக கோவில் நிர்வாகம் ஒரு அறையை அமைத்து தர வேண்டும்’ உள்ளிட்ட பல நிபந்தனைகளை பசுமை தீர்ப்பாயம் விதித்துள்ளது.

    அமர்நாத் குகைக்கோவிலில் பக்தர்களுக்கு செய்து தரப்படும் வசதிகள் குறித்து கோவில் நிர்வாகத்திடம் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் விளக்கம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், கோவிலில் பக்தர்களுக்கு கழிவறை வசதி இல்லை. சாலையோரங்களில் கடை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரவில்லை என குற்றம் சாட்டியிருந்தது.


    Next Story
    ×