search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதியில் 90 உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை
    X

    திருப்பதியில் 90 உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

    திருமலையில் உள்ள 90 உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் அறிக்கை ஐதராபாத் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருமலை:

    திருப்பதியில் உள்ள பல்வேறு உணவகங்களில் அதிக விலைக்கு உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அரிஹரி சேவா சமிதி என்ற அமைப்பினர் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க, திருப்பதி தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டனர். ஆனால், தேவஸ்தான அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டு உத்தரவுபடி, தேவஸ்தான அதிகாரிகள் திருமலையில் உள்ள பல்வேறு உணவகங்களின் பில் புத்தகங்களை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    திருமலையில் உள்ள பல்வேறு உணவகங்களில் விற்க வேண்டிய உணவுப்பொருட்களின் விலை நிர்ணயப்பட்டிலை தயாரித்து, அதில் உள்ள விலைக்கே அவற்றை விற்க வேண்டும் எனத் தேவஸ்தான அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    ஆனால், திருமலையில் உள்ள உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருட்களின் விலையை குறைக்காமல் அதிக விலைக்கே விற்று, பில்லில் மட்டும் விலையை குறைத்துக் குறிப்பிட்டு வழங்கியதாக புகார்கள் எழுந்தன.

    இந்த முறைகேடுகள் குறித்து ஐதராபாத் ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருமலையில் உள்ள அனைத்து உணவகங்களின் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்து, அதன் அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்தின் பரிந்துரையின்பேரில், திருமலையில் உள்ள பல்வேறு உணவகங்களில் ஆந்திர மாநில வணிக வரித்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

    உணவகங்களில் உணவு சாப்பிடும் பக்தர்களுக்கு முறையாக ரசீது வழங்கப்படுகிறதா? உணவகங்களில் கம்ப்யூட்டர் உள்ளதா? என ஆய்வு செய்தனர்.

    திருமலையில் உள்ள 90 உணவகங்களில் வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன் அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×