search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை: ராஜஸ்தான் போலீஸ் எஸ்.பி
    X

    தமிழக இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை: ராஜஸ்தான் போலீஸ் எஸ்.பி

    தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொன்ற விவகாரத்தில் விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்ட எஸ்.பி தீபக் பார்கவ் தெரிவித்துள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. நகைக்கடையின் மேல் தளத்தில் வாடகைக்கு இருந்த கொள்ளையர்கள், நகைக்கடையில் துளையிட்டு 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர்.

    நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சென்ராம், கோலாராம், சங்கர்லால், தவ்ராம் ஏற்கனவே கைது செய்யப்படுள்ள நிலையில், நாதுராம், தினேஷ் சவுத்ரி ஆகியோரை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்திற்கு தமிழக போலீசார் சென்றனர்.  

    பாலி மாவட்ட எஸ்.பி தீபக் பார்கவ்

    ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது, சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொளத்தூர் காவல் ஆய்வார் முனிசேகர் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து கூடுதல் தமிழக போலீசார் ராஜஸ்தானுக்கு செல்ல உள்ளனர்.

    ராஜஸ்தான் போலீஸ், தமிழக போலீசாருக்கு உதவி செய்யாததே சம்பவத்துக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பாலி மாவட்ட எஸ்.பி தீபக் பார்கவ் கூறியதாவது, “தமிழக காவல் ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக போலீசாருக்கு, ராஜஸ்தான் மாநில போலீசார் உதவியாக இருப்போம். ராம்புரா பகுதியில் இருக்கும் கொள்ளையர்களை அழிப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×