search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லைப்பகுதி மேம்பாட்டுக்கு ரூ.174 கோடி விடுவிப்பு: 6 மாநிலங்களுக்கு வழங்கியது உள்துறை அமைச்சகம்
    X

    எல்லைப்பகுதி மேம்பாட்டுக்கு ரூ.174 கோடி விடுவிப்பு: 6 மாநிலங்களுக்கு வழங்கியது உள்துறை அமைச்சகம்

    இந்தியாவின் எல்லையோர பகுதிகளின் மேம்பாட்டு பணிக்கு உள்துறை அமைச்சகம் 174 கோடி ரூபாய் விடுவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச எல்லையை கொண்டுள்ள 6 மாநிலங்கள் பயன் பெறும் என கூறப்படுகிறது
    புதுடெல்லி:

    இந்திய உள்துறை அமைச்சகம் சர்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்காக 174.32 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச எல்லையை கொண்டுள்ள அசாம், குஜராத், இமாசாலப்பிரதேசம், மணிப்பூர், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.



    எல்லைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த பணிகள் தொடரும். சர்வதேச எல்லையிலிருந்து 0-10 கி.மீ. தொலைவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடைபெறும்.  எல்லை பாதுகாப்பு படையினர் கொடுக்கும் தகவல் அடிப்படையில் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  

    அசாம் மாநிலம் சர்வதேச எல்லையை வங்காள தேசத்துடனும், மேற்கு வங்காளம் மாநிலம் நேபாளம் மற்றும் பூடானுடனும் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதே போல் குஜராத் மாநிலம் பாகிஸ்தானுடனும், மணிப்பூர் மற்றும் மியான்மர் உடனும், உத்தரப்பிரதேசம் மாநிலம் நேபாளத்துடனும், இமாசலப்பிரதேசம் மாநிலம் சீனா மற்றும் நேபாளத்துடனும் சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.

    Next Story
    ×