search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடகா: போலீஸ் ஐ.ஜி.யின் காருக்கு தீ வைத்த கலவரக்காரர்கள் - தீக்கிரையான வாகனம்
    X

    கர்நாடகா: போலீஸ் ஐ.ஜி.யின் காருக்கு தீ வைத்த கலவரக்காரர்கள் - தீக்கிரையான வாகனம்

    கர்நாடக மாநிலம் கும்டா பகுதியில் காவல்துறை ஐ.ஜி.யை காருக்குள் வைத்து கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம், உத்தர் கன்னடா மாவட்டத்தின் கும்டா பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் கடந்த 6-ம் தேதி காணாமல் போனார். அவரை போலீசார் தேடிவந்த நிலையில் 8-ம் தேதி அந்த வாலிபரின் பிரேதம் அப்பகுதியில் உள்ள நதிக்கரையோரம் கண்டெடுக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த வாலிபரை பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் கொலை செய்யததாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து அங்கு இந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளன.

    காவல்துறை இதுவரை எந்த அமைப்பின் மீதும் வெளிப்படையாக சந்தேகம் வெளிப்படுத்தவில்லை. பிரேத பரிசோதனை முடிவுக்காக காவல்துறை காத்திருக்கிறது. ஆனால் இது பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் செயல்தான் என பாஜக தலைவர்களும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    இதையடுத்து கலவரம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கலவரத்தை அடக்க காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. நிலைமை கைமீறியதால், வன்முறை நடைபெறும் இடங்களை மேற்பார்வையிட மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. ஹேமந்த் நிம்பால்கர் நேற்று சென்றிருந்தார்.

    அப்போது போலீஸ் ஐ.ஜி. சென்ற இன்னோவா காருக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். இதையடுத்து காரில் இருந்தவர்கள் தக்க நேரத்தில் கீழே இறங்கி காயமின்றி தப்பினர். இருப்பினும் கார் முழுவதுமாக தீக்கிரையாக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை பெரும் ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×