search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியா, இந்தியா, சீனா வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு - டெல்லியில் தொடங்கியது
    X

    ரஷியா, இந்தியா, சீனா வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு - டெல்லியில் தொடங்கியது

    ரஷியா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.
    புதுடெல்லி:

    ரஷியா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை பலப்படுத்தவும், இந்நாடுகள் அமைந்திருக்கும் பிராந்தியம் மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் தொடர்பாக உயர்மட்ட ஆலோசனை நடத்தவும் இந்நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திக்கும் மாநாடு நடைபெறுவது வழக்கம்.

    அவ்வகையில், இந்த ஆண்டின் மாநாடு புதுடெல்லியில் இன்று காலை தொடங்கியது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்கேய் லாவ்ராவ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    தெற்காசியாவில் தலைதூக்கி வரும் தீவிரவாதம், பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரும் இந்தியாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் சீன அரசின் தலையீடு தொடர்பாக இந்த மாநாட்டின்போது சுஷ்மா சுவராஜ் விவாதிக்கவுள்ளார்.
    Next Story
    ×