search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் கணிப்பு
    X

    ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கும்: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் கணிப்பு

    ஜி.எஸ்.டி. வரி, பணமதிப்பிழப்பின் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பொருளாதார நிபுணருமான ஒய்.வி.ரெட்டி கணித்துள்ளார்.
    மும்பை:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரும், பொருளாதார நிபுணருமான ஒய்.வி. ரெட்டி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் பொருளாதார நிலை சீரான போக்கில் இல்லை. இது 7.5-ல் இருந்து 8 சதவீதமாக வரும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதை இப்போதே கணிக்க முடியாது. அடுத்த 24 மாதங்களுக்கு இது சாத்தியம் இல்லை என்றே தோறுகிறது.

    ஜி.எஸ்.டி. வரி, பணமதிப்பிழப்பு போன்றவை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளன. இதுமட்டுமல்லாமல் வங்கிகளில் செயல்படாமல் உள்ள சொத்துக்களும் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை பாதித்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி பணமதிப்பிழப்பின் பாதிப்பு இன்னும் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதன்பிறகு தான் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். இதன்பிறகு நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று நம்பலாம்.


    தற்போது கச்சா எண்ணை விலை பொருளாதாரத்திற்கு கைகொடுத்து வருகிறது. இதன் விலை பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததால் அதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக கிடைத்து வரும் பணம் பொருளாதாரத்திற்கு உதவியாக இருந்து வருகிறது. இதை அரசின் செயல்பாடுகளுக்கு கிடைத்த பலனாக கருத முடியாது. இது 3-ம் நிலையில் இருந்து வரக்கூடிய சாதக அம்சமாகும்.

    கடந்த ஆட்சி காலத்தில் தகவல் தொடர்பு, மின்சக்தி, நிலக்கரி போன்ற துறைகளில் சிறந்த வளர்ச்சியை பெற்றது. ஆனாலும் பொறுப்பற்ற முறையில் அவர்கள் கொடுத்த கடன் கார்ப்பரேட் உலகில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு ஒய்.வி. ரெட்டி கூறினார்.
    Next Story
    ×