search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் 40 லட்சம் வழக்குகள் தேக்கம்
    X

    நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டுகளில் 40 லட்சம் வழக்குகள் தேக்கம்

    நாடு முழுவதும் உள்ள 24 ஐகோர்ட்டுகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கி உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் உள்ள 24 ஐகோர்ட்டுகளில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கி உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

    மாவட்டங்களில் இயங்கி வரும் கீழ் கோர்ட்டுகள், மாநிலங்களின் ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு என அனைத்து கோர்ட்டுகளிலும் தினந்தோறும் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் நீதிபதிகள் பற்றாக்குறை, கோர்ட்டுகளின் உள்கட்டமைப்பு வசதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த வழக்குகளின் விசாரணையில் தாமதம் ஏற்படுகிறது.

    இவ்வாறு தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என அரசியல் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் என அனைத்து பிரிவினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு நீதித்துறையும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    இப்படி நீண்ட காலமாக தேங்கியுள்ள வழக்குகளை அடையாளம் கண்டு, தேக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் ‘தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு’ என்ற கண்காணிப்பு அமைப்பு, கோர்ட்டுகளில் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை சேகரித்து உள்ளது. அந்த விவரங்களை தற்போது அந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் உள்ள 24 ஐகோர்ட்டுகளில் 40.15 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 19.45 சதவீத வழக்குகள் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பழமை வாய்ந்தவை ஆகும். 20 ஐகோர்ட்டுகளிலேயே 10 ஆண்டுகளுக்கு மேல் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 97 ஆயிரத்து 650 என தெரியவந்துள்ளது.

    இவ்வாறு 10 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்குகள் தேங்கி கிடப்பதில் மும்பை ஐகோர்ட்டு முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 63 வழக்குகள் தேங்கி உள்ளன. இதில் 96,596 சிவில் வழக்குகளும், 12,846 குற்ற வழக்குகளும் அடங்கி உள்ளன.

    அடுத்ததாக பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு 99 ஆயிரத்து 625 வழக்குகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இதில் 64,967 சிவில் வழக்குகளும், 13,324 குற்ற வழக்குகளும் அடங்கும். மொத்தம் 24 ஐகோர்ட்டுகள் இருந்தாலும் அலகாபாத் ஐகோர்ட்டு உள்ளிட்ட சில கோர்ட்டுகளில் தேங்கியுள்ள வழக்குகளின் தரவுகள் இந்த பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×