search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் பாராட்டு விழாவில் பங்கேற்ற மனைவிக்கு முத்தலாக் - கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவர் புகார்
    X

    பிரதமர் பாராட்டு விழாவில் பங்கேற்ற மனைவிக்கு முத்தலாக் - கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவர் புகார்

    முத்தலாக் முறையை ஒழிக்க பாடுபடும் பிரதமருக்கு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாராட்டு கூட்டத்தில் பங்கேற்ற மனைவிக்கு முத்தலாக் அளித்த கணவர் அவளுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை மேற்கோள் காட்டி, முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய மூன்று முறை ‘தலாக்’ கூறும் ‘முத்தலாக்’ முறை அமலில் உள்ளது.

    இது தொடர்பான வழக்கில் ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கிறது எனவும் அலகாபாத் ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

    முத்தலாக் பிரச்சனை தொடர்பான வேறுசில வழக்குகளும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதில் முத்தலாக் முறைக்கு ஆதரவாக அனைத்திந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும், இதர சில அமைப்புகளும் அவற்றுக்கு எதிராக மத்திய அரசும் வாதிட்டு வருகின்றன.

    இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியிடம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர்.

    முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டால் திருமணமான ஒரு இஸ்லாமியர் தனது மனைவியிடம் இருந்து மணவிலக்கு பெற சட்டப்படி என்ன மாற்று என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த முகுல் ரோஹத்கி, முத்தலாக் முறையை செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தால் இஸ்லாமிய திருமணங்கள் மற்றும் விவாகரத்து தொடர்பாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

    ‘முத்தலாக்’ முறையை ஒழிக்க வரும் குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசின் சார்பில் பாராளுமன்றத்தில் புதிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில், நெடுங்காலமாக நடைமுறையில் இருந்துவரும் ‘முத்தலாக்’ முறையை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்காக பாடுபடும் பிரதமருக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்ற ஃபர்யா என்ற பெண்ணை அவரது கணவரான டனிஷ் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    பொதுக்கூட்டத்தில் இருந்து திரும்பிவந்த என்னிடம் ’மோடியால் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது’ என்று கூறிய எனது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்ததுடன் என்னையும் எனது குழந்தையும், அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்’ என ஃபய்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

    அவள் எப்போது பார்த்தாலும் ஜீன்ஸ் பேண்ட் போன்ற ஆடைகளை அணிந்து திரிந்தாள். அவளுக்கு கள்ளத்தொடர்பும் இருப்பதால் அவளுடன் நான் சேர்ந்து வாழ விரும்பவில்லை. அதனால், அவளை நான் விவாகரத்து செய்து விட்டேன். நான் முத்தலாக் கொடுக்கவில்லை. மேலும், மோடியின் பாராட்டு விழா கூட்டத்துக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது கணவர் டனிஷ் குறிப்பிட்டுள்ளார்.

    கணவரின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஃபய்ரா, என் கணவருக்கு அவரது உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உண்டு. அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×