search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: தடையை மீறி பேரணி- பிரிவினைவாதி யாசின் மாலிக் மீண்டும் கைது
    X

    காஷ்மீர்: தடையை மீறி பேரணி- பிரிவினைவாதி யாசின் மாலிக் மீண்டும் கைது

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று தடையை மீறி ஐ.நா. சபை அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பிரிவினைவாதி யாசின் மாலிக்கை போலீசார் கைது செய்தனர்.
    ஜம்மு:

    சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பேரணிகள், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப் போவதாக இங்குள்ள சையத் அலி ஷா ஜீலானி, மிர்வாய்ஸ் உமர் பரூக், முஹம்மது யாசின் மாலிக் ஆகியோர்களின் அமைப்புகளை உள்ளடக்கிய பிரிவினைவாத அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

    இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள சோனாவார் பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் (இந்தியா - பாகிஸ்தான்) ராணுவ கண்காணிப்பு அமைப்பு அலுவலகத்தை நோக்கி ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் முஹம்மது யாசின் மாலிக் தலைமையில் இன்று பிற்பகல் சிலர் பேரணியாக செல்ல முயன்றனர்.

    இந்த பேரணியில் பங்கேற்பதற்காக வந்த யாசின் மாலிக்கை லால் சவுக் சிட்டி செண்டர் அருகே கைது செய்த போலீசார் அவரை கோத்தி பாக் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
    Next Story
    ×