search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளா: சாலையில் நடனமாடிய முஸ்லீம் மாணவிகள் - வைரலாகும் வீடியோ
    X

    கேரளா: சாலையில் நடனமாடிய முஸ்லீம் மாணவிகள் - வைரலாகும் வீடியோ

    கேரளாவின் மலப்புரம் சாலையில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக முஸ்லீம் மாணவிகள் நடனம் ஆடியதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியில் டிசம்பர் 1 ம் தேதி எய்ட்ஸ் தினத்தன்று விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மாணவிகள் சாலையில் நடனம் ஆடினர். அதில் மூன்று முஸ்லீம் மாணவிகள் நடமாடிய வீடியோ அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முஸ்லீம் மாணவிகள் இது போன்று சாலையில் ஆடுவது இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாகும் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீடியோ இணையதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.



    இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான மாவட்ட மருத்துவ அதிகாரி இது குறித்து பேசுகையில், நடனம் ஆடிய மூன்று பேரும் மருத்துவ மாணவிகள். எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே நடனம் ஆடினர். ஆனால் மக்கள் அதனை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் என கூறினார்.

    தலையில் ஹிஜாப் அணிந்தபடி எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு நடனமாடிய மூன்று இஸ்லாமிய மாணவிகளின் செயல் ஏற்க முடியாதது என்று இஸ்லாமியர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×