search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர் உயிரிழந்தார்
    X

    ஜம்மு - காஷ்மீர்: தீவிரவாதிகளுடனான மோதலில் ராணுவ வீரர் உயிரிழந்தார்

    ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்துக்கு உட்பட்ட காசிகண்ட் பகுதியில் நேற்று மாலை பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் போனிகாம் என்ற இடத்தின் அருகே வந்தபோது, அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், ஒரு வீரர் படுகாயம் அடைந்தார். மேலும், இந்த தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×