search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகாராஷ்டிராவில் தேர்தல் பணியில் ஈடுபட மறுத்த 27 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
    X

    மகாராஷ்டிராவில் தேர்தல் பணியில் ஈடுபட மறுத்த 27 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

    மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட மறுத்ததாக 27 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    யாவத்மால்:

    மகாராஷ்டிர மாநிலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட மறுத்ததாக பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன. தற்போது வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் பலர் அந்தப் பணியில் ஈடுபட மறுத்துள்ளனர்.

    ராலேகான் தொகுதியில் உள்ள ராலேகான், பாபூல்கான், கலாம்ப் தாலுகாக்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் பலர் தேர்தல் பணிகளை ஏற்க மறுத்ததாக தாசில்தார்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் 27 ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “நவம்பர் 15 முதல் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணிக்காக வாக்குச்சாவடி அதிகாரிகளாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 27 ஆசிரியர்கள் அந்த பணியை செய்ய மறுத்துவிட்டனர். அத்துடன், அது கல்விப் பணி அல்ல என்றும் கூறினர். தேர்தல் பணிக்கு வராததால் வேறு வழியில்லாமல் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் கொடுத்தோம்” என்றார்.
    Next Story
    ×