search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜனதா தொண்டர்கள் மோதலால் ஹேமமாலினி பிரசார கூட்டம் ரத்து
    X

    பா.ஜனதா தொண்டர்கள் மோதலால் ஹேமமாலினி பிரசார கூட்டம் ரத்து

    உ.பி. 2-வது கட்ட தேர்தலுக்காக பா.ஜனதா வேட்பாளர் ராதா தேவியை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்த ஹேமமாலினி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் பொதுக்கூட்டத்தை ரத்து செய்தார்.
    ஆக்ரா:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் 2 நாட்களுக்கு முன் நடந்தது.

    இந்த நிலையில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மதுரா தொகுதி பா.ஜனதா எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி பிரசாரம் செய்தார். 8 பொதுக்கூட்டங்களில் பேசிய அவர் கடைசியாக மதுராவுக்கு பிரசாரம் செய்ய வந்தார்.

    அங்கு 20-வது வார்டில் ‘டீம் கேட்’ என்ற இடத்தில் பா.ஜனதா வேட்பாளர் ராதா தேவியை ஆதரித்து பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருந்தார். ஆனால் அங்கு உள்ள பா.ஜனதா தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    இதனால் ஹேமமாலினி எம்.பி. பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டார். இது கட்சி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி மதுரா பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஹேமமாலினி 8 பொதுக் கூட்டங்களில் பேசியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பிரசாரத்தை ரத்து செய்துவிட்டார். அவர் டெல்லி செல்கிறார் என்று தெரியவந்தது.

    ஆனால் ஹேமமாலினியிடம் கேட்டபோது நான் நன்றாகத்தான் இருக்கிறேன். கடந்த 5 நாட்களில் எந்த கூட்டத்தையும் ரத்து செய்யவில்லை. இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, எனது பிரசார கூட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்கள். மதுரா எனது சொந்த தொகுதி என்பதால் சிறப்பாக பிரசார பணியை மேற்கொண்டுள்ளேன் என்றார்.

    Next Story
    ×