search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டாம், வளர்ச்சி தேவை’: திபெத் நிலைப்பாட்டில் தலாய்லாமா மாற்றம்
    X

    ‘சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டாம், வளர்ச்சி தேவை’: திபெத் நிலைப்பாட்டில் தலாய்லாமா மாற்றம்

    சீனாவிடமிருந்து சுதந்திரம் கேட்கவில்லை எனவும் திபெத் வளர்ச்சியடைய வேண்டும் என விரும்புவதாக திபெத் புத்தமத தலைவர் தலாய்லாமா பேசியுள்ளார்.
    கொல்கத்தா:

    இமயமலைப்பகுதியில் உள்ள திபெத் பிரதேசமானது சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தங்களை விடுவித்து சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என திபெத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

    மேலும், திபெத்தைச் சேர்ந்த புத்தமத தலைவர் தலாய்லாமா இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கொல்கத்தா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், திபெத் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “கடந்த காலம் கடந்து போனதாகவே இருக்கட்டும். எதிர்காலத்தை நாங்கள் பார்த்தாக வேண்டும். சீவாவுடன் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் சுதந்திரம் கோரவில்லை. எங்களுக்கு வளர்ச்சி வேண்டும்” என்று கூறினார்.

    “திபெத்தின் இறையான்மை மற்றும் கலாச்சாரத்தை சீனா மதிக்க வேண்டும். சீனா மற்றும் திபெத் வெவ்வேறான கலாச்சாரங்களை கொண்டது. சீனர்கள் எப்படி அவர்கள் நாட்டை மதிக்கிறார்களோ, நாங்கள் எங்களது நாட்டை மதிக்கிறோம். இத்தனை காலம் நடைபெற்ற போராட்டங்களினால் என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” எனவும் பேசினார்.
    Next Story
    ×