search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டனில் பத்மாவதி படத்துக்கு சென்சார் போர்டு ஒப்புதல்
    X

    பிரிட்டனில் பத்மாவதி படத்துக்கு சென்சார் போர்டு ஒப்புதல்

    தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி படத்துக்கு பிரிட்டன் நாட்டின் சென்சார் போர்டு ஒப்புதல் அளித்துள்ளதால், அங்கு படத்தை வெளியிட தடை நீங்கி உள்ளது.
    லண்டன்:

    சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம் ‘பத்மாவதி’. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை ஆண்ட ராஜவம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மாவதி வாழ்க்கை வரலாற்றைக் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், பத்மாவதியாக தீபிகா படுகோனும், ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.

    இப்படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா போன்ற அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    பத்மாவதி திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ரிலீஸ் தேதியை தாங்களாக முன்வந்து தள்ளிவைப்பதாக தயாரிப்பு நிறுவனமான வையாகாம் 18 அறிவித்துள்ளது. 

    இதற்கிடையே, மத்தியப்பிரதேச மாநிலம் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உள்பட பல்வேறு மாநிலங்களில் பத்மாவதி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து அந்தந்த மாநில முதல் மந்திரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இந்நிலையில், பிரிட்டனில் உள்ள சென்சார் போர்டு பத்மாவதி படத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 

    'பத்மாவதி' படத்துக்கு 12-ஏ மதிப்பீடு அளித்துள்ள சென்சார் வாரியம், எந்த விதமான தணிக்கையையும் படத்தில் மேற்கொள்ளவில்லை. 12-ஏ மதிப்பீடு என்பது 12 வயதுக்கு குறைவான குழந்தைகள் பெரியவர்களுடன் மட்டுமே வந்து படத்தைக் காண முடியும் என்பதாகும்.

    இதுகுறித்து பிரிட்டிஷ் சென்சார் வாரிய இணையதளத்தில், ''தணிக்கை கோரிய 'பத்மாவதி' (12-ஏ) படத்தில் மிதமான வன்முறை இருக்கிறது. படத்தின் அனைத்துப் காட்சிகளும் நீக்கப்படாமல் வெளியாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×