search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை
    X

    திருப்பதி கோவிலில் லட்டு தயாரிப்பை அதிகரிக்க நடவடிக்கை

    திருப்பதி தேவஸ்தானம் லட்டு தயாரிப்பை அதிகரிக்க புதிய அதிநவீன பூந்தி தயாரிக்கும் எந்திரத்தை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.
    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திருமலையில் தற்போது உள்ள பூந்தி தயாரிக்கும் கூடத்திலும், லட்டு தயாரிக்கும் கூடத்திலும் போதிய இடவசதி இல்லை எனத் தெரிகிறது. இதனால், அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை தயாரிக்க முடியவில்லை எனக்கூறப்படுகிறது.

    மேலும் திருமலையில் பூந்தி தயாரிக்கும் கூடம் ஒன்று புதிதாக கட்டப்பட உள்ளது. அதற்காக, திருப்பதி தேவஸ்தானம் பல நவீன உபகரணங்களை கொள்முதல் செய்துள்ளது. லட்டு தயாரிப்பை அதிகரிக்க, திருப்பதி தேவஸ்தானம் புதிய அதிநவீன பூந்தி தயாரிக்கும் எந்திரத்தை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

    அதற்காக, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு தலைமையில் முதன்மை என்ஜினீயர் சந்திர சேகர்ரெட்டி, மற்றும் அதிகாரிகள் நேற்று சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல ஸ்வீட்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட சென்றனர்.


    சென்னை அம்பத்தூரில் உள்ள பிரபல ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் பூந்தி தயாரிக்கும் எந்திரத்தை, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, எந்திரத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தபோது எடுத்தபடம்.

    அந்த ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் பயன்படுத்தி வரும் அதிநவீன பூந்தி தயாரிக்கும் எந்திரத்தின் பணி திறனை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பூந்தி தயாரிக்கும் எந்திரத்தின் செயல்பாடுகள், எந்திரத்தை இயக்கும் முறைகள், பராமரிக்கும் முறைகள் ஆகியவற்றை கேட்டறிந்தனர்.

    அப்போது திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறுகையில்:-

    சென்னை ஸ்வீட் நிறுவனத்தில் பூந்தி தயாரிக்கும் எந்திரத்தைப் போல் திருப்பதி தேவஸ்தானம் சார்பிலும் விரைவில் ஒரு புதிய எந்திரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.

    அதன் மூலம், தினமும் அதிக அளவில் பூந்தி தயாரிக்கலாம். திருப்பதி லட்டுவின் தரத்தையும் மேம்படுத்தலாம். அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை தயாரித்து பக்தர்களுக்கு வினியோகம் செய்யலாம், என்றார்.
    Next Story
    ×