search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளைஞர் காங்கிரஸ் விமர்சனத்துக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி கண்டனம்
    X

    இளைஞர் காங்கிரஸ் விமர்சனத்துக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி கண்டனம்

    பிரதமர் மோடியை கேலி செய்து இளைஞர் காங்கிரசின் இணையதள பத்திரிகையில் வெளியாகி இருக்கும் டுவிட்டர் பதிவுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி சிறுவனாக இருந்த போது டீ விற்றவர். இதை கேலி செய்யும் வகையில், இளைஞர் காங்கிரசின் இணையதள பத்திரிகையான ‘யுவ தேஷ்’சில் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியாகி இருந்தது. பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசாமே ஆகியோர் உரையாடுவது போன்ற படத்துடன் அந்த டுவிட்டர் பதிவு வெளியிடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று டெல்லியில் பேட்டி அளிக்கையில், பிரதமர் மோடியை கேலி செய்து இளைஞர் காங்கிரசின் இணையதள பத்திரிகையில் வெளியாகி இருக்கும் டுவிட்டர் பதிவு பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது அந்த டுவிட்டர் பதிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், மிகவும் எளிய குடும்பத்தில் இருந்து வந்த மோடி இந்தியாவில் பரம்பரை ஆட்சிக்கு முடிவு கட்டியவர் என்றும், ஆனால் காங்கிரஸ் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றும், இனிமேல் கற்றுக்கொள்ளப்போவதும் இல்லை என்றும் கூறினார்.

    இதற்கிடையே, மோடியை கேலி செய்யும் டுவிட்டர் பதிவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அக்கட்சியின் மூத்த தலைவர்களான பிரியங்கா சதுர்வேதி, ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோரும் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து ‘யுவ தேஷ்’ இணையதள பத்திரிகையில் இருந்து அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது.
    Next Story
    ×