search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி. முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: கோரக்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் யோகி ஆதித்யநாத்
    X

    உ.பி. முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: கோரக்பூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார் யோகி ஆதித்யநாத்

    உ.பி.யில் இன்று முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்.
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி இன்று முதற்கட்டமாக 24 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படுகிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். உள்ளாட்சித் தேர்தலிலும் இதேபோன்ற இமாலய வெற்றியை பெறும் முனைப்பில் பா.ஜ.க. நிர்வாகிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.  ஆனால், பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களை எதிர்க்கட்சி தலைவர்கள் முன்வைத்து, பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர்.

    இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஷாம்லி, மீரட், பிஜ்னோர், பதான், ஆக்ரா, கான்பூர், சித்ரகூடம், உன்னாவ், அமேதி, பைசாபாத், கோண்டா, கோரக்பூர், ஆசம்கர், காசிப்பூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

    5 நகராட்சிகள், 71 நகராட்சிகள் மற்றும் 154 நகர பஞ்சாயத்துகளின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை தேர்வு செய்வதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.



    2-வது கட்டமாக வரும் 26-ம் தேதி 25 மாவட்டங்களிலும், மூன்றாவது கட்டமாக 29-ம் தேதி 26 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 1-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    Next Story
    ×