search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 27-ந்தேதி விசாரணை
    X

    தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 27-ந்தேதி விசாரணை

    தமிழக உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனு வருகிற 27-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் கே.கே.ரமேஷ் என்பவர் பொது நல மனு ஒன்றை தாக்கல் தாக்கல் செய்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், ஒய்.வி.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரரின் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகினார்.

    அப்போது அவர் நீதிபதிகளிடம் கூறுகையில், ‘சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே இது தொடர்பான வழக்கை முழுக்க விசாரித்து அனைத்து அம்சங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு செப்டம்பர் 17-ந்தேதி தேர்தலை அறிவித்து நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.



    ஆனால் தமிழ்நாடு அரசும், மாநில தேர்தல் ஆணையமும் வேண்டும் என்றே தேர்தலை ஒத்திப் போட்டு வருகிறது. எனவே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிடுமாறு மனுதாரர் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்’ என்றார்.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து மனுக்களும் வருகிற 27-ந் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே தொகுதி மறுவரையறை கோரி தி.மு.க. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×