search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச்சு: பரூக் அப்துல்லாவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க டெல்லி கோர்ட்டு மறுப்பு
    X

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பேச்சு: பரூக் அப்துல்லாவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க டெல்லி கோர்ட்டு மறுப்பு

    ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி பரூக் அப்துல்லா வெளியிட்ட கருத்துக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று டெல்லி கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    காஷ்மீர் முன்னாள் முதல்- மந்திரியும், ஸ்ரீநகர் தொகுதி எம்.பி.யுமான பரூக் அப்துல்லா சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த மவுலானா அன்சா ரஸா டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் இந்தியாவை அவமதிக்கும் வகையில் பாகிஸ்தானுக்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்ட பரூக் அப்துல்லாவிடம் உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். மனுதாரர் சம்பந்தப்பட்ட துறையை அணுகினால் அதற்கு அவர்கள் தகுதியின் அடிப்படையில் தீர்வு காண்பர் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×