search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி விஜய் ரூபானி வேட்புமனு தாக்கல்
    X

    குஜராத் சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி விஜய் ரூபானி வேட்புமனு தாக்கல்

    குஜராத் மாநில முதல்-மந்திரி விஜய் ரூபானி, சட்டசபை தேர்தலையொட்டி தனது சொந்த தொகுதியான ராஜ்கோட் மேற்கில் போட்டியிடுவதற்காக தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
    அகமதாபாத்:

    182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டசபைக்கு வருகிற டிசம்பர் 9-ந்தேதியும், 14-ந்தேதியும் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது. முதல்-மந்திரி விஜய் ரூபானி தனது சொந்த தொகுதியான ராஜ்கோட் மேற்கில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    முன்னதாக ஜெயின் மற்றும் இந்து மத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். முஸ்லிம் மத தலைவரையும் சந்தித்தார். பின்னர் ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தார். அவருடன் மத்திய நிதிமந்திரி அருண்ஜெட்லியும் கலந்து கொண்டு உடன் சென்றார்.

    முதல்-மந்திரி விஜய் ரூபானி தனது சொத்து மதிப்பு ரூ.9.08 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதில் தனது பெயரிலும் மனைவி அஞ்சலிபென் பெயரிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதில் நகை பணத்தின் மதிப்பு மட்டும் ரூ.3.45 கோடி.

    தனக்கு சொந்தமாக இன்னோவா காரும், மனைவியிடம் மாருதி வாகன் காரும் இருப்பதாக மனுவில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×