search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை வரும் பக்தர்களுக்கு பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு
    X

    சபரிமலை வரும் பக்தர்களுக்கு பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு

    சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக தற்போது பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடந்து வருகிறது. இதையொட்டி இதுவரை இல்லாத அளவிற்கு சபரிமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகே சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்ய முடிகிறது. தற்போது சபரிமலையில் கடும் பனிப்பொழிவு உள்ளது. பனியையும் பொருட்படுத்தாமல் அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.

    சபரிமலை பக்தர்களுக்கு வசதியாக தற்போது பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விரதம் இருந்து சபரிமலை வரும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று அங்குள்ள அலுவலகத்தில் ரூ.250 கட்டி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அவர்களுக்கு அந்த கோவிலிலேயே இருமுடி கட்டு வழங்கப்படும். அந்த இருமுடி கட்டை அவர்கள் தலையில் சுமந்துகொண்டு 18-ம் படி வழியாக சென்று சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யலாம்.

    இந்த முறைக்கு பக்தர்கள் இடையே பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் இருமுடி கட்டு கட்டிச் சென்றுள்ளனர்.
    Next Story
    ×