search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப்ளூவேல் விளையாட்டை நீக்குவது இயலாத காரியம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
    X

    ப்ளூவேல் விளையாட்டை நீக்குவது இயலாத காரியம்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

    சில மாதங்களுக்கு முன்னர் ஸ்மார்ட் போன் வழியே ஊடுருவி மாணவர்களின் உயிரைப் பறித்த ப்ளூவேல் விளையாட்டை இணையத்தில் இருந்து நீக்குவது இயலாத காரியம் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகம் முழுவதும் ‘புளூவேல்’ (நீலத்திமிங்கலம்) என்ற இணைய தள விளையாட்டு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர். ‘புளூவேல்’ விளையாட்டில் ‘50’ சவால்கள் அளிக்கப்படுகிறது.

    ரெயில் பாதையில் ரெயில் வரும் போது நின்று செல்பி எடுப்பது, பேய் படம், ஆபாச படம் பார்ப்பது, நடுநிசியில் மயானம் செல்வது என தினம் ஒரு சவால் விடுக்கப்படுகிறது. 50-வது நாள் விளையாடுபவர்கள் தற்கொலை செய்ய தூண்டப்படுகிறார்கள். இதனால் ‘புளூவேல்’ விளையாட்டு அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவிலும் புளூ வேல் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாணவர்களும், வாலிபர்களும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்த விளையாட்டிர்கு அடிமையானவர்களை போலீசார் மீட்டு ஆலோசனை அளித்து வருகின்றனர்.

    இந்த விளையாட்டை இணையத்தில் இருந்து நீக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், வாட்ஸ் அப் போன்ற செல்போன் ஆப்களில் பகிரப்படுவதால் ப்ளுவேல் விளையாட்டை இணையதளத்தில் இருந்து முழுமையாக நீக்க இயலாது என்றும், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் தற்கொலை செய்ததை ஊடகங்கள் பெரிதுப்படுத்திவிட்டன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    Next Story
    ×