search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகாரில் 4 கைப்பந்து வீரர்கள் சுட்டுக்கொலை
    X

    பீகாரில் 4 கைப்பந்து வீரர்கள் சுட்டுக்கொலை

    பீகாரில் 4 கைப்பந்து வீரர்கள் சுட்டுக்கொலை இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாட்னா:

    பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நவ்குச்சியா பகுதியை சேர்ந்த கைப்பந்து வீரர்கள் பிரதீப்ஜா (வயது 24), சர்வான் சவுத்ரி (25), சவுரவ்குமார் ராய் (26), சோட்டு சவுத்ரி (30). இதில் சவுரவ்குமார் தேசிய அளவில் ஜூனியர் பிரிவில் விளையாடி வருகிறார்.

    கடந்த மாதம் 13-ந்தேதி இந்த 4 கைப்பந்து வீரர்களையும் பிரபல ரவுடியான பிங்கு ஜகா உள்ளூர் போட்டியில் விளையாட வருமாறு அழைத்தார். அதன்படி 4 கைப்பந்து வீரர்களும் அங்குள்ள கிராமம் ஒன்றில் விளையாடினர். போட்டி முடிந்த பிறகு அவர்களுக்கு மதுபான விருந்து கொடுக்கப்பட்டது.

    4 கைப்பந்து வீரர்களும் நல்ல குடிபோதையில் இருந்த போது பிங்கு ஜகா தலைமையிலான கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் 4 பேரும் குண்டு பாய்ந்து பலியானார்கள்.

    பின்னர் அந்த ரவுடிக் கும்பல் கைப்பந்து வீரர்கள் 4 பேரது உடல்களை துண்டு துண்டாக வெட்டியது. அவற்றை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசி விட்டனர்.

    நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆனால் போலீசார் இதுவரை ரவுடி பிங்கு ஜகாவை இன்னும் கைது செய்யவில்லை. அவனை கைது செய்ய கோரி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சுதிர்குமார் கூறும் போது பழிக்கு பழியாகவே 4 கைப்பந்து வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். பிங்கு ஜாவின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதற்கு பழிக்கு பழியாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது என்றார்.

    Next Story
    ×