search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் சட்டசபை தேர்தலில் 3 மந்திரிகளுக்கு டிக்கெட் இல்லை: பா.ஜ.க.
    X

    குஜராத் சட்டசபை தேர்தலில் 3 மந்திரிகளுக்கு டிக்கெட் இல்லை: பா.ஜ.க.

    குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மூன்று மந்திரிகளுக்கு இடம் வழங்கவில்லை.
    ஆமதாபாத்:

    182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபைக்கு 2 கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

    ஆளும் பாரதிய ஜனதா ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது. இதற்காக அந்த கட்சியின் தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள். பா.ஜனதா நேற்று முன்தினம் 70 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்திருந்தது.

    முதல்-மந்திரி விஜய் ரூபானி ராஜ்கோட் மேற்கு தொகுதியிலும், துணை முதல்-மந்திரி நிதின் படேல் மெக்சனா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். 16 மந்திரிகள் உள்பட 49 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா 2-வது வேட்பாளர் பட்டியலை நேற்று இரவு வெளியிட்டது. 36 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 3 மந்திரிகளுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படவில்லை. நிர்மலா வத்வானி, மங்குபாய் பட்டேல், ஷாம்ஜி சவுகான் ஆகிய மந்திரிகளின் பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. 19 புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    பாரதிய  ஜனதா இதுவரை 106 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்துள்ளது.
    Next Story
    ×