search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா: நோயாளிகள் இனி வரிசையில் நிற்க வேண்டாம் - நிம்ஸ் மருத்துவமனையில் ஆப்ஸ் அறிமுகம்
    X

    தெலுங்கானா: நோயாளிகள் இனி வரிசையில் நிற்க வேண்டாம் - நிம்ஸ் மருத்துவமனையில் ஆப்ஸ் அறிமுகம்

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நிம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நிம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் வகையில் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தி ஐதராபாத்தில் நிம்ஸ் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமானோர் உள் மற்றும் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மருத்துவமனைக்கான அனுமதி சீட்டு, மருத்துவ பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை பெறுவதில் நோயாளிகள் கடுமையாக சிரமப்பட்டு வருவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, நிர்வாகம் சார்பில் மருத்துவமனையை கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.



    இந்நிலையில், நிம்ஸ் மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என நிம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மனோகர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டமாக வெளி நோயாளிகள் பிரிவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் ஆப்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகள் இனி வரிசையில் நிற்க வேண்டாம். அவர்கள் இந்த ஆப்சில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×