search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நான்கு நாட்கள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்கிறார்
    X

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நான்கு நாட்கள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்கிறார்

    நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் நாளைமறுநாள் முதல் வடகிழக்கு மாநிலங்களுக்கு நான்கு நாட்கள் பயணம் செல்கிறார்.

    புதுடெல்லி:

    நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் வடகிழக்கு மாநிலங்களுக்கு நான்கு நாட்கள் பயணம் செல்கிறார்.

    புதுடெல்லியில் இருந்து 19-ம்தேதி தனி விமானம் மூலம் அருணச்சல பிரதேச மாநிலம் இடாநகருக்கு வருகிறார். அன்றைய தினம் அங்குள்ள இந்திரா காந்தி பூங்காவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தின் 40-வது ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன்பின் புதிதாக கட்டப்பட்டுள்ள அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை கட்டிடத்தை திறந்து வைத்து, பேரவை கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    பயணத்தின் இரண்டாம் நாளான 20-ம்தேதி அசாம் மாநிலத்தின் சில்கார் நகரில் நடைபெற்றுவரும் நமமி பரக் திருவிழாவின் நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின் கவுஹாத்தி பல்கலைகழகத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.



    பயணத்தின் மூன்றாம் நாளான 21-ம்தேதி மணிப்பூர் மாநிலத்திற்கு செல்கிறார். அங்கு வடகிழக்கு வளர்ச்சி உச்சி மாநாட்டையும், 10-வது ஆண்டு சங்காய் திருவிழாவையும் தொடங்கி வைக்கிறார்.

    22-ம்தேதி மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்திற்கு சென்று மரியாதை செலுத்தி விட்டு அன்று மாலையே டெல்லிக்கு திரும்புகிறார்.
    Next Story
    ×