search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்களை மிரட்டி மனைவிக்கு ஓட்டு கேட்ட பா.ஜனதா கவுன்சிலர்
    X

    வாக்காளர்களை மிரட்டி மனைவிக்கு ஓட்டு கேட்ட பா.ஜனதா கவுன்சிலர்

    ஓட்டு போடுங்கள், இல்லையெனில் விளைவுகள் ஏற்படும் என வாக்காளர்களை மிரட்டி மனைவிக்கு பாரதிய ஜனதா கவுன்சிலர் ஓட்டு கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

    லக்னோவை அடுத்த பாராபங்கி நகரில் கவுன்சிலர் பதவிக்கு தற்போதைய பா.ஜனதா கவுன்சிலர் ரஞ்சித்குமார் ஸ்ரீவந்சவாவின் மனைவி சஷி ஸ்ரீவந்சவா போட்டியிடுகிறார். மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்த ரஞ்சித்குமார் வாக்காளர்களை மிரட்டும் வகையில் பேசினார். அவர் பேசியதாவது:-

    இங்கு சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடக்கவில்லை, உங்கள் தலைவர்கள் யாரும் உங்களுக்கு உதவ வரமாட்டார்கள், சாலைகள், கால்வாய்கள் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் கையில் உள்ளது. மற்ற பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும்.

    இங்கு பா.ஜனதாவை விட யாரும் சாம்பியன் அல்ல. என் மனைவிக்கு நீங்கள் ஓட்டுப் போட வேண்டும். இல்லையெனில் விளைவுகளை சந்திப்பீர்கள். சமாஜ்வாடி கட்சி உங்களை காப்பாற்றாது, பா.ஜனதா ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

    இங்கு வசிப்பவர்கள் எங்களுக்கு ஓட்டுப்போடுங்கள், நான் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. நீங்கள் ஓட்டுப் போட்டால் அமைதியாக வசிப்பீர்கள், இல்லையெனில் பலவிதமான கஷ்டங்களை அனுபவிப்பீர்கள்.

    இவ்வாறு மிரட்டியவாறு ஓட்டு கேட்டார்.

    அப்போது மேடையில் மாநில மந்திரிகள் தாராசிங் சவுகான், ரமாபதி சாஸ்திரி ஆகியோர் இருந்தனர். அவர்கள் கவுன்சிலரின் மிரட்டல் பேச்சை அமைதியாக கவனித்துக் கொண்டு இருந்தனர்.
    Next Story
    ×