search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆலப்புழா கலெக்டர் அனுபமா
    X
    ஆலப்புழா கலெக்டர் அனுபமா

    கேரளா மந்திரியின் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து துணிச்சலாக அறிக்கை தாக்கல் செய்த பெண் கலெக்டர்

    கேரளா மந்திரியின் நிலம் ஆக்கிரமிப்பு குறித்து கடும் எதிர்ப்பையும் மீறி துணிச்சலாக அறிக்கை தாக்கல் செய்த பெண் கலெக்டர் குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.
    கொழிஞ்சாம்பாறை:

    சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை விதிகளை மீறினார் என்பதை ஆதாரத்துடன் வெளியிட்டு தமிழக- கர்நாடக மக்களின் பாராட்டை பெற்றவர் சிறை அதிகாரி ரூபா.

    அப்போது சமூக வலைதளங்களில் ரூபா கதாநாயகியாக சித்தரிக்கப்பட்டார். இதேபோன்று கேரளாவில் பெண் கலெக்டர் ஒருவர் கதாநாயகியாக வலம் வருகிறார். அது குறித்து சம்பவம் வருமாறு:-

    கேரள போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தாமஸ் சாண்டி. இவர் மீது அரசு நிலம் ஆக்கிரமிப்பு புகார் வந்தது. கோர்ட்டு கண்டனத்தையடுத்து தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அரசு நிலத்தை தாமஸ் சாண்டி ஆக்கிரமிப்பு செய்தது குறித்து அங்குள்ள தனியார் தொலைக்காட்சிதான் முதன்முதலில் வெளியிட்டது. அதன்பின்னர் எதிர்கட்சிகள் இதனை கையில் எடுத்தன. இது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட்டு ஆலப்புழா கலெக்டர் அனுபமாவுக்கு உத்தரவிட்டது.

    ராஜினாமா செய்த அமைச்சர் தாமஸ் சாண்டி.

    தாமஸ் சாண்டிக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அதை பொருட்படுத்தாமல் கலெக்டர் அனுபமா துணிச்சலுடன் சேட்டிலைட் மூலம் நிலத்தை அளவீடு செய்தார். அப்போது அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரிகளுக்கும், ஐகோர்ட்டுக்கும் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் பின்னரே தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இவரது துணிச்சலான இந்த செயல் இளைஞர், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவரை கதாநாயகிபோன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×