search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா குடும்பத்துக்கு சொகுசு கார்களை வாங்கி கொடுத்த சுகேஷ்
    X

    சசிகலா குடும்பத்துக்கு சொகுசு கார்களை வாங்கி கொடுத்த சுகேஷ்

    சசிகலா உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சொகுசு கார் விற்பனை குறித்த ஆவணங்களில் சுகேஷுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
    பெங்களூரு:

    இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    சுகேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை ஆனார். இந்த நிலையில் சுகேஷ்சந்திரசேகர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகளில் இருந்து 8 கொகுசு கார்கள் மற்றும் ஒரு விளையாட்டு பைக் ஆகியவற்றை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

    வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் சொகுசு கார்களை தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த முக்கிய வி.வி.ஐ.பி.க்களுக்கு சுகேஷ்சந்திரசேகர் விற்று வந்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. இதில் சசிகலாவின் குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது.

    சசிகலா உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சொகுசு கார் விற்பனை குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளன.


    அதில் சுகேசுக்கும், கொச்சியை சேர்ந்த அவருடைய நண்பர் நவாசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள நவாஸ் வீடு மற்றும் அவருடைய உறவினரும், வெளிநாடுவாழ் இந்தியருமான தொழில் அதிபர் ஒருவர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திதான் இந்த 8 கார்களையும், விளையாட்டு பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்த கார்கள் சுகேஷ்சந்திரசேகருக்கு சொந்தமானதா? அல்லது யாருக்கு சொந்தமானது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கார்கள் எந்த நாடுகளில் வாங்கப்பட்டது? யார் பெயரில் வாங்கப்பட்டது? என்பது குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×