search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் ஜெகன்மோகன் பாத யாத்திரையில் குவியும் கிராம மக்கள்
    X

    ஆந்திராவில் ஜெகன்மோகன் பாத யாத்திரையில் குவியும் கிராம மக்கள்

    ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பாத யாத்திரை செல்லும் வழியில் கிராம மக்கள் குவிந்து வருகிறார்கள்.
    நகரி:

    ஆந்திராவில் எதிர்க்கட்சி தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 6-ந்தேதி மக்களை சந்திக்கும் பாத யாத்திரையை தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து சென்று மக்களின் குறைகளை கேட்கிறார். முதலில் கடப்பா மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாத யாத்திரை செய்தார்.

    நேற்று முதல் கர்னூல் மாவட்டத்தில் பாத யாத்திரை தொடங்கினார். ஜெகன் மோகன் குடிசை வீடுகளுக்கு சென்று கிராம மக்களிடம் குறைகளை கேட்கிறார்.

    அவரது பாத யாத்திரையின்போது திரளாக வந்து ஜெகன்மோகன் ரெட்டியிடம் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார்கள். பலர் மனுக்கள் கொடுக்கிறார்கள். அதை பெற்று கொள்ளும் ஜெகன்மோகன் ரெட்டி, உரிய நடவடிக்கை எடுத்து வழிவகை செய்வதாக கூறினார்.

    கிராமங்கள் தோறும் செல்லும் அவர் மக்கள் மத்தியில் பேசும்போது, “தான் ஆட்சிக்கு வந்தால் வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன்” என்று உறுதி அளித்து வருகிறார்.

    ஜெகன்மோகன் ரெட்டி பாத யாத்திரை செல்லும் வழியில் கிராம மக்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருக்கு கடும் சவாலாக இருக்கிறது.
    Next Story
    ×