search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் மூதாதையர் சொத்து அல்ல’: பரூக் அப்துல்லா பேச்சு
    X

    ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் மூதாதையர் சொத்து அல்ல’: பரூக் அப்துல்லா பேச்சு

    “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் புதுடெல்லியின் (இந்தியா) மூதாதையர் சொத்து அல்ல” என காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா பாரமுல்லா மாவட்டம் உரி நகரில் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் புதுடெல்லியின் (இந்தியா) மூதாதையர் சொத்து அல்ல. கடந்த 70 ஆண்டுகளாக இது நமது நிலம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது மீண்டும் அதையே கூறுகிறார்கள். ஆனாலும் அதைக் கைப்பற்ற முடியவில்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீர் நமக்கு சொந்தம் என்று சொல்லப்போகிறோம்” என்று குறிப்பிட்டார்.

    அவருடைய இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, கடந்த 12-ந் தேதி பரூக் அப்துல்லா ஊடகங்களிடம் பேசும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி பீகார் மாநிலம் பெட்டியா நகர கோர்ட்டில் முரத் அலி என்ற வக்கீல் புகார் மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யும்படி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு ஜெயராம் பிரசாத் நேற்று உத்தரவிட்டார். 
    Next Story
    ×