search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.3455 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்
    X

    ஜார்கண்ட் மாநிலத்தில் ரூ.3455 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று 3455 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இலவச ஆம்புலன்ஸ், மருத்துவ காப்பீடு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
    ராஞ்சி:

    நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக ராம்நாத் கோவிந்த் இன்று ஜார்கண்ட் மாநிலத்துக்கு வந்தார்.

    புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சி வந்தடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஞ்சி நகரில் உள்ள பிர்ஸா சவுக் பகுதியில் இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த தியாகி பிர்ஸா முண்டா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    ஜார்கண்ட் மாநிலம் உதயமான ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அவர், ராஞ்சி நகரில் உள்ள கவர்னர் மாளிகையை விமான நிலையத்துடன் இணைக்கும் ரூ.464.90 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய சாலை திட்டம், ரூ.294.04 கோடி ரூபாய் மதிப்பிலான ஹர்மு மேபாலம் அமைக்கும் திட்டம், ரூ.181.12 கோடி ரூபாய் மதிப்பிலான கண்ட்டோலி மேம்பாலம் திட்டம் உள்பட   3455 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    290 கோடு ரூபாய் செலவில் இலவச ’108’ ஆம்புலன்ஸ் சேவையையும், 636 கோடி ரூபாய் செலவில் 57 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    யோகோடா சத்சங்கம் சார்பில் நடைபெறும் விழாவில் பகவத் கீதை நூலின் இந்தி தெளிவுரை புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுகொள்ளும் ராம்நாத் கோவிந்த் இன்றிரவு டெல்லி திரும்புகிறார்.
    Next Story
    ×