search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆகாஷ் மனோஜ்
    X
    ஆகாஷ் மனோஜ்

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 16 குழந்தைகளுக்கு தேசிய விருதை ஜனாதிபதி வழங்கினார்

    கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 16 குழந்தைகளுக்கு தேசிய விருதை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
    புதுடெல்லி:

    கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தன்று தேசிய விருதுகளை ஜனாதிபதி வழங்கி வருகிறார். அந்தவகையில் குழந்தைகள் தினமான நேற்று ஜனாதிபதி மாளிகையில் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடந்தது.

    தமிழ்நாட்டில் உள்ள கிருஷ்ணகிரியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஆகாஷ் மனோஜ் புதுமை கண்டுபிடிப்புக்காக தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு தங்கப்பதக்கம், ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு, ரூ.10 ஆயிரத்துக்கு புத்தகங்கள் பெற கூப்பன், தேசிய விருது பெற்றதற்கான சான்றிதழ் ஆகியவற்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சிறுவன் ஆகாஷ் மனோஜ் மாரடைப்பை முன்கூட்டியே அறியக்கூடிய வகையிலான கருவியை கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய தாத்தா திடீரென மாரடைப்பால் இறந்ததால் ஏற்பட்ட பாதிப்புதான் இந்த கருவியை கண்டுபிடிக்க உதவியதாக ஆகாஷ் மனோஜ் தெரிவித்தார். இந்த கருவி பலருடைய உயிரை காப்பாற்றும் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×