search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியான் மாநாட்டை முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
    X

    ஆசியான் மாநாட்டை முடித்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

    பிலிப்பைன்சில் நடைபெற்ற இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.
    புதுடெல்லி:

    பிலிப்பைன்சில் நடைபெற்ற இந்தியா - ஏசியான் மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார்.

    பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 25-வது இந்தியா - ஏசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் மாநாடு நேற்று நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். ஏசியான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அங்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆசிய நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்நிலையில், 12-வது கிழக்கு ஆசிய உச்ச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
     
    இதைத்தொடர்ந்து, தனது மூன்று நாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    36 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பைன்ஸ் செல்லும் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×