search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணுடன் ஆபாசமாக வீடியோவில் இருப்பது ஹர்திக் பட்டேலா?: குஜராத் அரசியலில் பரபரப்பு
    X

    பெண்ணுடன் ஆபாசமாக வீடியோவில் இருப்பது ஹர்திக் பட்டேலா?: குஜராத் அரசியலில் பரபரப்பு

    குஜராத் பட்டேல் சமூக தலைவர் ஹர்திக் பட்டேல் பெண்ணுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் டி.வி.களில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை சமூகங்களில் பட்டேல் சமூகமும் ஒன்று. இவர்கள் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்ட அமைப்பின் தலைவராக 24 வயது ஹர்திக் பட்டேல் செயல்பட்டு வருகிறார்.

    தற்போது குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹர்திக் பட்டேல் பாரதிய ஜனதாவுக்கு எதிரான நிலைப்பட்டை எடுத்து காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் பட்டேல் சமூகத்தினரின் ஓட்டு காங்கிரசுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, பாரதிய ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஹர்திக் பட்டேலின் ஆபாச வீடியோ ஒன்று திடீரென வெளியாகி உள்ளது. ஹர்திக் பட்டேல் போன்ற தோற்றம் உடைய ஒருவர் பெண்ணுடன் ஆபாசமாக இருப்பது போல அந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இவை முதலில் சமூக வலைதளங்களில் வெளி வந்தது. சிறிது நேரத்தில் பல்வேறு டி.வி.க்களும் அந்த காட்சிகளை ஒளிபரப்பின.



    ஹர்திக் பட்டேலின் ஆபாச படங்கள் வெளிவர இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. அப்போது ஹர்திக் பட்டேல் என்னை பற்றி போலியான ஆபாச படங்களை வெளியிட்டு என்னை ஒழிக்க பாரதிய ஜனதா சதி செய்கிறது என்று குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் தான் இப்போது ஆபாச சி.டி. வெளியாகி இருக்கிறது.

    இந்த வீடியோ படம் மார்பிங் செய்யப்பட்டு போலியாக வெளியிடப்பட்டுள்ளது என்று ஹர்திக் பட்டேல் கூறி இருக்கிறார்.

    நான்  ஜனதாவை எதிர்ப்பதால் அவர்கள் தோல்வி அடையும் நிலையில் உள்ளனர். எனவே, என்னை அரசியல் ரீதியாக வீழ்த்தவும், என்னை மோசமாக சித்தரிக்கும் வகையிலும் இந்த வீடியோ படத்தை மார்பிங் செய்து போலியாக பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.

    பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இது, தனிப்பட்ட நபர்கள் விவகாரத்தில் ஊடுருவும் செயலாகும்.

    என்னைப் பற்றி ஆபாச படங்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். அதே போல் படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த கீழ்த்தரமான அரசியலை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் பல சி.டி.க்களை பாரதிய ஜனதா கட்சியினர் வெளியிடலாம்.

    சமீபத்தில் பாரதிய ஜனதாவில் சேர்ந்த ஒருவரின் சதி இதில் இருக்கிறது. ஆனால், இது போன்ற மோசமான செயல்களை கண்டு நான் கவலைப்படவில்லை. இந்த படம் போலியானது என்பதை நான் ஆதாரங்களுடன் நிரூபிப்பேன். நான் அப்பாவி என்பதை வெளி உலகுக்கு காட்டுவேன்.

    என்னை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இது போன்ற படத்தை சித்தரித்து அனுப்பி இருப்பது குஜராத் பெண்களை அவமதிக்கும் செயலாகும்.

    இந்த வீடியோவை வெளிநாட்டில் இருந்து யூடியூப் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்த பணிகளை பாரதிய ஜனதாவுக்காக யாரோ செய்து இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    மத்திய மந்திரி மன்சுக் மான்டவியா கூறும் போது, இந்த வீடியோ உண்மையானதுதான். இது, போலியானது என்று கருதினால் ஹர்திக் பட்டேல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கட்டும்.

    இந்த வீடியோவுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார்.

    காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சக்தி சிங் ஹோகைல் கூறும் போது, குஜராத் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ள பாரதிய ஜனதா அதை தவிர்ப்பதற்காக மோசமான அரசியலில் இறங்கி இருக்கிறது. இதற்கு குஜராத் மக்கள் பழி தீர்க்க வேண்டும் என்று கூறினார்.
    Next Story
    ×