search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு
    X

    11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

    ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
    புதுடெல்லி:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீது கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

    அப்போது அ.தி.மு.க.வில் தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

    இவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த நிலையில் செம்மலை எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.


    அந்த மனுவில் சபாநாயகர் அதிகார வரம்பு குறித்து விசாரிக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு உள்ளது. ஆந்திர சட்டபேரவை தொடர்பான இது போன்ற ஒரு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளதால் தி.மு.க. தொடர்ந்த வழக்கை விசாரிக்கும் வகையில் வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று மூத்த வக்கீல் முகுல்ரோத்தகி கேட்டுக் கொண்டதால் 13-ந்தேதி (இன்று) விசாரணை நடைபெறும் என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்தார்.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது.

    செம்மலை கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. இந்த வழக்கை விசாரிக்க மறுத்து விட்டது.
    Next Story
    ×