search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் - ராஜஸ்தானில் ‘பத்மாவதி’ சினிமாவுக்கு எதிராக போராட்டம்
    X

    குஜராத் - ராஜஸ்தானில் ‘பத்மாவதி’ சினிமாவுக்கு எதிராக போராட்டம்

    இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்த 'பத்மாவதி' படத்திற்கு எதிராக குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைகிறது.
    ஜெய்ப்பூர்:

    நடிகை தீபிகா படுகோனே நடித்த இந்திப் படம் ‘பத்மாவதி’ வருகிற 1-ந்தேதி திரைக்கு வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 13-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினி மீது ஆசைகொண்டு படை எடுத்தான். இந்த காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டதாக கூறி ராஜபுத்ர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தடைவிதிக்க மறுத்து மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேர்தல் கமி‌ஷனில் பா.ஜனதா அளித்த புகார் மனுவும் தள்ளுபடி ஆனது.



    இதற்கிடயே குஜராத், ராஜஸ்தானில் வசிக்கும் ராஜபுத்திர வம்சத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு இந்து அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன.

    குஜராத்தில் சூரத் மற்றும் காந்திநகரில் விஷ்வ இந்து பரி‌ஷத், பஜ்ரங்தளம், ரகபூத், கர்னசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் கண்டனப் பேரணி நடந்தது.

    ராஜஸ்தானில் ராஜபுத்ர சமூகத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா வழிகாட்டிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மராட்டிய மாநிலம் மும்பையில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இந்து அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    இதற்கிடையே ‘பத்மாவதி’ படம் டிசம்பர் 1-ந்தேதி நாடு முழுவதும் திரைக்கு வருகிறது. அன்றைய தினம் ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டம் நடத்த ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது,
    Next Story
    ×