search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வெற்றியால் பா.ஜனதா அதிர்ச்சி
    X

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் வெற்றியால் பா.ஜனதா அதிர்ச்சி

    மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிலான்சு சதுர்வேதி வெற்றியால் பா.ஜனதா கடும் அதிர்ச்சியில் உள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடை பெற்று வருகிறது.

    அங்குள்ள சாட்னா மாவட்டம் சித்ர கூட் சட்டசபை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த 9-ந்தேதி நடந்தது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரேம்சிங் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைதேர்தல் நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது.

    இதில் காங்கிரஸ் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் வேட்பாளர் நிலான்சு சதுர்வேதி 14,133 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் சங்கர் தயாள் திரிபாதியை தோற்கடித்தார்.


    காங்கிரசுக்கு 66,810 ஓட்டுகளும், பாரதிய ஜனதாவுக்கு 52,677 ஓட்டுகளும் கிடைத்தன.

    2013-ம் ஆண்டு நடந்த தேர்தலை விட காங்கிரஸ் தற்போது கூடுதல் ஓட்டுகளை பெற்று முத்திரை பதித்துள்ளது. 2013-ல் 45,913 ஓட்டுகளே பெற்று இருந்தது. அப்போது 10,970 வாக்குகள் வித்தியாசத்தில்தான் (37 சதவீதம்) வெற்றி பெற்று இருந்தது.

    ஆனால் தற்போது வெற்றி 52 சதவீதமாக உள்ளது. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காங்கிரஸ் இந்த தொகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

    இந்த தோல்வியால் ஆளும் பா.ஜனதா அதிர்ச்சி அடைந்துள்ளது. காங்கிரஸ் தொகுதியை தக்க வைத்து இருந்தாலும் கூடுதல் ஓட்டுக்களை பெற்றதால்தான் பா.ஜனதா கடும் அதிர்ச்சியில் உள்ளது.

    சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் இந்த மோசமான தோல்வியால் பா.ஜனதா மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளது. அடுத்த சட்டசபை தேர்தலில் (2018) 200 தொகுதிகளை கைப்பற்றுவதே அந்த கட்சி இலக்காக கொண்டு உள்ளது. அங்கு மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன.

    இந்த தொகுதியில் முதல்-மந்திரி சவுகான் 2 இடங்களில் பிரசாரம் செய்து இருந்தார். அந்த பிரசாரம் எந்த பலனும் இல்லாமல் போனது.

    பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலத்தில் அதுவும் அந்த கட்சி வலுவாக இருக்கும் மத்திய பிரதேசத்தில் இடை தேர்தலில் பெற்ற வெற்றியால் காங்கிரஸ் உற்சாகம் அடைந்துள்ளது.

    Next Story
    ×