search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறக்கப்படும்: டெல்லி அரசு அறிவிப்பு
    X

    காற்று மாசுபாடு காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை திறக்கப்படும்: டெல்லி அரசு அறிவிப்பு

    டெல்லியில் நிலவிய அபாயகரமான காற்று மாசுபாட்டால் கடந்த சில தினங்களாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    டெல்லியில் நிலவிய அபாயகரமான காற்று மாசுபாட்டால் கடந்த சில தினங்களாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமான நிலைக்கு சென்றுள்ளது, டெல்லியை ஒட்டியுள்ள அரியானா, பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது. பனி காரணமாகவே தெளிவான வானிலையின்மை நிலவுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



    தீபாவளிக்கு பின்னர் புதுடெல்லியில் காற்றின் தரம் அளவு என்பது இரண்டாவது முறையாக மோசமான நிலையை கடந்துள்ளது. வெளிப்புற காற்றின் தரத்தை நிர்ணயம் செய்யும் காற்று தர குறியீடு (ஏகியூஐ) டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் காலை 9.30 மணியளவில் 446 ஆக பதிவாகி உள்ளது. தேசிய தலைநகர் பிராந்திய பகுதியில் உள்ள 19 மையங்களில், 12 மையங்களில் காற்று சுகாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றதை காட்டி உள்ளது.

    இதற்கிடையே டெல்லியில் மோசமான வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டது.

    இந்நிலையில், கடந்த சில தினங்களாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், காற்று மாசுபாடு காரணமாக கடந்த 5 நாள்களாக மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    ஆனால், அரியானா மாநிலத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×