search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி: காற்று மாசு காரணமாக நியூயார்க் செல்லும் விமானம் ரத்து
    X

    டெல்லி: காற்று மாசு காரணமாக நியூயார்க் செல்லும் விமானம் ரத்து

    டெல்லியில் நிலவி வரும் காற்று மாசு காரணமாக நியூயார்க் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது. காற்றில் நுண்துகள்களின் அளவு வழக்கத்தைவிட பல மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்த நச்சுக்காற்றால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்தே அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே, இன்று மாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் தலைநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றில் மாசு புகைமூட்டம் போல் காணப்பட்டது. இதனால் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், டெல்லியில் இருந்து நியூயார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காற்று மாசு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என யுனைனெட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், கடும் பனிமூட்டம் நிலவுவதால் ரெயில் போக்குவரத்தும் பாதிப்பு அடைந்துள்ளது. 64 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 ரெயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×