search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாரதா நிறுவன உரிமையாளரை மம்தா பலமுறை பார்த்துள்ளார்: முகுல் ராய் கடும் தாக்கு
    X

    சாரதா நிறுவன உரிமையாளரை மம்தா பலமுறை பார்த்துள்ளார்: முகுல் ராய் கடும் தாக்கு

    கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட முகுல் ராய் பேசுகையில், சாரதா நிறுவன உரிமையாளரை முதல் மந்திரி மம்தா பானர்ஜி பலமுறை சந்தித்து பேசியுள்ளார் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். திரிணாமுல் கட்சி தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் முகுல் ராய். இவர் முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரியாக பதவி வகித்தவர்.

    திரிணாமுல் கட்சி மற்றும் முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன் முகுல் ராய்க்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து, பா.ஜ.க.வில் கடந்த 3-ம் தேதி இணைந்தார். முகுல் ராய் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட் போவதில்லை என திரிணாமுல் கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், பா.ஜ.கவில் இணைந்து ஒரு வாரம் ஆகிய நிலையில், கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முகுல் ராய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் முதல் மந்திரி மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசியதாவது:



    சுமார் ரூ. 2,500 கோடி அளவில் ஊழலில் ஈடுபட்டது சாரதா நிறுவனம். ஆனால் அவர்களது அலுவலகத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு சாரதா நிறுவன உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், சாரதா நிறுவன உரிமையாளரை மம்தா பானர்ஜி பலமுறை சந்தித்து பேசியுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை மற்றும் லட்சுமி பூஜை ஆகியவற்றை மம்தா அரசு நிறுத்தியுள்ளது. இதன்மூலம் மம்தா சிறுபான்மை அரசியல் நடத்தி வருகிறார். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். எனவே 2019-ல் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க நிச்சயம் ஆட்சி அமைக்கும். 

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×