search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் சோதனை நடத்தி மந்திரியை பா.ஜ.கவில் சேர வருமான வரித்துறை மிரட்டுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
    X

    வீட்டில் சோதனை நடத்தி மந்திரியை பா.ஜ.கவில் சேர வருமான வரித்துறை மிரட்டுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு

    வீட்டில் சோதனை நடத்தி மந்திரியை பா.ஜனதாவில் சேர வருமான வரித்துறை மிரட்டுகிறது என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டியுள்ளார்.

    பெங்களூர்:

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் டெல்லி மேல்-சபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தாவாமல் இருக்க பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்னர்.

    அவர்களுக்கு கர்நாடக காங்கிரஸ் அரசு முழு பாதுகாப்பு அளித்தது. மந்திரி சிவகுமார் ஓட்டலில் தங்கி இருந்து 41 எம்.எல்.ஏ.க்களுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். இந்த நிலையில் மந்திரி சிவகுமார் வீட்டிலும் அவர் தங்கி இருந்த ஓட்டலிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

    தற்போது சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனை பற்றி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூரில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு சி.பி.ஐ. வருமானவரித்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்துகிறது. தங்கள் வழிக்கு வர மறுப்பவர்களை இந்த அமைப்புகளை கொண்டு மிரட்டுகிறது.

    பா.ஜனதா அரசு, சோதனை நடத்தும் அரசாக செயல்படுகிறது. 2 மாதத்துக்கு முன்பு கர்நாடக மந்திரி சிவக்குமார் விட்டிலும் அரசியல் காரணங்களுக்காக சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறை குழுவில் இடம்பெற்று இருந்த சில அதிகாரிகள் நேரடியாகவே மந்திரி சிவகுமாரிடம் பா.ஜனதாவில் சேர்ந்து விடுங்கள் என்று மிரட்டி இருக்கிறார்கள். அதற்கு உடன்படாததால் சிவகுமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பி விசாரணை நடத்துகிறார்கள்.

    சிவகுமார், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பார். அவர் காங்கிரசின் உண்மையான விசுவாசி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×