search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா - வங்காளதேசம் இடையே ரெயில் சேவை: மோடி, ஷேக் ஹஸீனா தொடங்கிவைத்தனர்
    X

    இந்தியா - வங்காளதேசம் இடையே ரெயில் சேவை: மோடி, ஷேக் ஹஸீனா தொடங்கிவைத்தனர்

    கொல்கத்தா மற்றும் குல்னா ஆகிய நகரங்கள் இடையே புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹஸீனா மற்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவின் கொல்கத்தா மற்றும் வங்காளதேசத்தின் குல்னா ஆகிய இரு நகரங்கள் இடையே ‘பந்தான் எக்ஸ்ப்ரஸ்’ எனும் புதிய ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முழுவதும் ஏ.சி வசதியுடைய இந்த ரெயில் சேவையை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹஸீனா மற்றும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும் போது, இந்த முக்கியமான தருணத்தில் இரு நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இன்று மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    ஷேக் ஹஸீனா பேசும் போது, இந்த ரெயில் சேவை இயக்கப்பட்டுள்ள இன்றைய நாள் சிறப்பு மிக்கது. இரு நாடுகளின் எல்லையோரம் இருக்கும் மக்களுக்கு இந்த ரெயில் கனவு நிஜமானது போல என்று கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மேஹ்னா நதியில் கட்டப்பட்டுள்ள இரு பாலங்களையும் இரு தலைவர்கள் கூட்டாக திறந்து வைத்தனர்.
    Next Story
    ×