search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் முட்டி மோதும் வாகனங்கள்: மாசு கலந்த பனிமூட்டத்தில் திணறும் ஆக்ரா (வீடியோ)
    X

    சாலையில் முட்டி மோதும் வாகனங்கள்: மாசு கலந்த பனிமூட்டத்தில் திணறும் ஆக்ரா (வீடியோ)

    இந்தியாவின் வட மாநிலங்களில் மாசு கலந்த பனிமூட்டம் அதிகரித்து வருவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாமல் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
    லக்னோ:

    இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அங்கு வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை காணப்படுகிறது.

    வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் இன்று காலை எழுந்த மக்களுக்கு பெரும் பனிமூட்டம், காற்று மாசுபாடு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தீபாவளிக்கு பின்னர் புதுடெல்லியில் காற்றின் தரம், என்பது இரண்டாவது முறையாக மோசமான நிலையை கடந்து உள்ளது.

    இந்நிலையில், ஆக்ரா மற்றும் மதுரா இடையிலான  யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், முன்னால் செல்லும் வாகனங்களை பார்க்க முடியாத அளவுக்கு புகையுடன் கூடிய பனிமூட்டம் இருந்தது. இதனால் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இன்று காலை அரங்கேறிய இந்த அசம்பாவிதம் காரணமாக நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.



    எக்ஸ்பிரஸ் சாலை என்பதால் வேகமாக வந்த வாகனங்கள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மற்ற வாகனங்கள் மீது மோதி நின்றன. இன்று காலை ஏற்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    காற்று மாசுபாடு காரணமாக பேருந்து, ரெயில் சேவைகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு. டெல்லி விமான நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. தெளிவான வானிலையின்மை காரணமாக விமான ஓடுதளம் மூடப்பட்டது. சில விமானங்கள் வேறு விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.

    யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் ஏற்பட்ட விபத்து வீடியோவினை கீழே காணலாம்..,


    Next Story
    ×